இந்தியாவில் ஆண்களில் அதிகம் காணப்படும் புற்றுநோய் 
வாய்ப்புற்றுநோயே.
வாய்ப்புற்றுநோயால் தினமும் எட்டு இந்தியர்கள் தங்கள் வாழ்வை இழப்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா ஒரு மணிநேரத்துக்கு ஒரு இந்தியர் வாய்ப்புற்றுநோயால் 
பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள்?
உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு வாய்ப்புற்றுநோயால் பாதிக்கவர்கள் 
இந்தியாவில் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
80-90 சதவீதமான வாய்ப்புற்றுநோய், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை 
உபயோகப்படுத்துவதாலே வருகிறது.
அதனால் 10 பேரில் 9 பேரை நம் முறையான பழக்கத்தினால் வாய்ப்புற்றுநோய் 
வராமல் தடுக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு வாய்ப்புற்றுநோய் வராமல் தடுப்பதே எளிய வழி.
வாய்ப்புற்றுநோய் அறிகுறிகள்:
- நீண்ட நாளாகக் காணப்படும் அகற்ற முடியாத வெள்ளை அல்லது சிகப்பு நிறமான தழும்பு.       
- வாய்ப்பகுதியில் நீண்ட நாளாகக் காணப்படும் அகற்ற முடியாத வெள்ளையும் சிவப்பு நிறமும் கலந்த தழும்பு 
- வாயின் உட்பகுதியிலோ, வெளிபகுதியிலோ, கழுத்துப்பாகுதியிலோ கட்டி மூன்று திங்கட்கிழமைக்கு மேல் இருத்தல்
   
- வாயில் ஏற்படும் அதிகமான எரிச்சல். உதடும், வாயினுள் தோன்றிய வென்படலமும் தடித்தும் வெள்ளையுமாக காணப்டுதல் 
- நாக்கை மடிபதினால் சிரமம் அல்லது நாக்கை அசைக்க முடியாத நிலை
- வாய் திறக்க ஏற்படும் கஷ்டம்
- தாடைப் பகுதியில் கட்டி அதனால் கட்டுப்பல் சரியாக பொருந்தாமல்இருப்பது
- நாக்கு அல்லது வாய்ப் பகுதியில் உணர்வு மறுத்துபோதல்
- உணவு விழுங்குவதற்கு சிரமம், உணவு விழுங்கும்போது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் நீண்ட நாளாக இருக்கும் புண்
- எந்தக் காரணமும் இல்லாமல் தானாக பற்கள் விழுவது
- வாயில் இருந்து வரும் உதிரபோக்கு
- எடை குறைதல்
வாய்ப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக் காரணிகள்:
1. வெற்றிலை மெல்லுவது

2. பாக்கு, பாக்குத்தூள் மெல்லுவது

3. புகைத்தல் (சிகரெட், பீடி, சுருட்டு)

4. மது அருந்துதல்

5. கூர்மையான பற்கள் அல்லது பொருத்தமில்லா பற்கட்டை உபயோகபடுத்துதல்.
6. ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தொற்று.
7. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் (மருந்து அல்லது நோய் காரணமாக).
8. சத்துணவு குறைபாடு மற்றும் உணவில் பழங்கள், கீரை, காய்கறி தவிர்த்தல்.
9. யுவி சூரிய கதிர்வீச்சு.
10.சுகாதரமற்ற முறையில் வாயைப் பேணுதல்.
வாய்ப் புற்றுநோய் வராமல் தவிர்க்க:
- வெற்றிலை போடுவதை முற்றாக தவிருங்கள்
- பாக்கு தொடர்பான பொருட்களைத் தவிருங்கள்
- புகைத்தலையும், மதுபானத்தையும் தவிருங்கள்
- சுகாதாரமான முறையில் வாயைப் பேணுங்கள்
- பழங்கள், காய்கறி மற்றும் கீரைகளை அதிக அளவில் கொண்ட சமச்சீர் உணவை உண்ணுங்கள்
- எளிய வாழ்க்கை முறையையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள்
- மாதம் ஒரு முறை சுயவாய்ப் பரிசோதனையும், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வாயைப் பல் வைத்தியரைக் கொண்டு பரிசோதியுங்கள்
வாய்ப் சுயப்பரிசோதனை:
- நன்கு வெளிச்சமான இடத்தை தேர்வு செய்யுங்கள்.
- கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- கட்டுப்பல் இருந்தால் அகற்றி வைக்கவும்.
- உங்கள் முகத்தோற்றத்தில் ஏதாவது மாற்றம் உள்ளதா என பரிசோதனை செய்யவும்.
- முகத்தில் இரு பக்கமும் கழுத்து பகுதியிலும் ஏதாவது மாற்றம் உள்ளதா என பரிசோதனை செய்யவும் .
- முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள தோலில் ஏதாவது மாற்றம் உள்ளதா, மச்சம் பெரிதாக ஆகியுள்ளதா, புண் அல்லது கட்டி உள்ளதா என பார்க்கவும்.
- கழுத்தின் இரு பக்கமும் உங்களது விரல் நுனியை பயன்படுத்தி கட்டி, தடிப்பு அல்லது புண் இருக்கிறதா என உணர்ந்து பார்க்கவும்.
1. வாயை நன்றாக அகலத் திறந்து விரல்களால் மேல் உதட்டை மேலே திருப்பியும் கீழ் உதட்டை கீழ்த்திருப்பியும் பரிசோதிக்கவும். உங்கள் உதட்டை ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் வைத்து அழுத்திப் பார்த்துக் கட்டி, புண், உணர்வு இல்லாமல் இருத்தல், இரத்தக்கசிவு ஏதாவது இருக்கிறதா என பரிசோதனை செய்யவும்.


2. நாக்கை நன்றாக வெளியிழுத்து உள் அன்னத்தைப் பரிசோதனை செய்து ஏதாவது கட்டி , நிறம் மாற்றம் இருக்கிறதா என பார்க்கவும். விரலால் வாய் மேல் பகுதியை அழுத்திப் பார்த்து மாற்றம் இருக்கிறதா என பார்க்கவும்.

3. வாயை நன்றகத் திறந்து நாக்கை மேலே தூக்கி வாயின் அடிபகுதியினை பரிசோதனை செய்யவும். கட்டி அல்லது புண் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என பரிசோதனை செய்யவும்.


4. வாயை நன்றாக அகலத்திறந்து கன்னங்களில் உட்பிரதேசம், பக்கவாட்டு பகுதியை நன்கு பரிசோதனை செய்யவும்.


5.நாக்கை நன்றாக வெளியிழுத்து நாக்கின் நாக்கின் நுனி முதல் அடிவரை பரிசோதியுங்கள். நாக்கின் பக்கங்களையும் பரிசோதனை செய்யுங்கள்.


6. மேல் உதட்டை மேலே இழுத்தும் கீழ் உதட்டை கீழே இழுத்தும் பல் ஈர் பகுதியை பரிசோதனை செய்யவும்.

வாய்ப்புற்றுநோய் தவிர்ப்போம்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
 
 
										