
இந்தியாவில் பெண்களைத் தாக்குகின்ற புற்றுநோய்களில் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் இரண்டாம் இடத்தை வகிக்கிறது .
நாள் ஒன்றுக்கு 11 இந்திய பெண்கள் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் நோயாளிகளாகக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.
மிக ஆரம்பத்திலேயே கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை கண்டறிவதால் இதை முற்றிலும் குணப்படுத்தலாம்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:

- மாதவிடாயின் போது அதிக இரத்தம் வெளியேறுதல். 
- யோனியினூடாக ஒழுங்கற்ற குருதிப் பெருக்கு.
- தாம்பத்திய உறவின்பின் யோனியினூடாகக் குருதிப் பெருக்கு.
- யோனியினூடாகக் குருதிக் கலந்த அல்லது துர்வாடை கொண்ட திரவப் பெருக்கு.  
- மாதவிடாய் சக்கரம் முற்றாக நின்றபின் இரத்தப்போக்கு ஏற்படல்.
- இரு மாதவிலக்கிற்கு நடுவே இரத்தப் போக்கு ஏற்படுதல்.
- அடி வயிற்று வலி.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள்:
- ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தொற்றுடையவர்கள்.
- மிக இளவயதில் பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணைகளைப் பெற்றவர்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணைகளைப் கொண்டவர்களை பாலியல் இணையாகப் பெற்றவர்கள்.
- புகைப்பழக்கம் உள்ளவர்கள் அல்லது அதிக அளவில் புகைப்பழக்கம் உள்ளவர்களோடு அருகில் இருப்பவர்கள்.
- சில நோய்களுக்காக, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் மருந்து வகைகளை எடுத்துகொள்பவர்கள்.
- கடந்த காலங்களில் பாலியல் ரீதியாக தொற்றுநோய் வரலாறு கொண்டவர்கள்.
- மிக அதிக குழந்தைகளை பெறுபவர்கள்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் வராமல் தடுக்க:
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணைகளை தவிர்த்தல்ஆணுறையை பயன்படுத்துவதன் மூலம் ஹச்பிவி கிருமித்தொற்றைத் தவிர்க்கலாம்.
- பாலியல் கிருமித் தொற்றை உடனுக்குடன் வைத்தியம் பார்த்து சரி செய்து கொள்ளவும்.
- ஹச்பிவி தடுப்பூசி *9 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் இரண்டு தடவை தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் . *15 வயது மேலான பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மூன்று தடவை போடலாம்.
- புகையிலை சம்பந்தமான பொருட்களை தவிர்க்கவும்.
- சிறு வயதிலேயே பாலியல் நடவடிக்கைகளைத் தடுத்தல்
- அதிக குழந்தைகள் பெறுவதை தடுக்க சரியான கருத்தடை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க பரிசோதனைகள்:
இந்த பரிசோதனை வெளிநோயாளியாக செய்துக்கொள்ளலாம். வலி இல்லா பரிசோதனையாகும்.
- பேப் பரிசோதனை(Pap smear Test):  
 இது கருப்பைக் கழுத்துப் பகுதியில் செய்யப்படுவது.
- ஹச்பிவி டிஎன்ஏ பரிசோதனை(HPV DNA).
யார் பேப் பரிசோதனை பரிந்துரை செய்யப்படுகிறார்?
- பேப் பரிசோதனை ஆரோக்கியமாக வாழும் பெண்களுக்குரிய பரிசோதனையாகும். 
 முதலாவது தாம்பத்திய பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து 5 வருடங்கள் பின்னர், எல்லாப் பெண்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகின்றது.
- 30 வயதுக்கு மேற்பட்ட எல்லா பெண்களும் செய்து கொள்ளலாம்.
எப்பொழுது செய்ய வேண்டும்?
மாதவிடாய் ஆரம்பித்து 10 முதல் 20 நாள் வரையில் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
பேப் பரிசோதனை தேவையில்லாதவர்கள்:
- 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள்.
- 65 வயதை கடந்த பெண்கள், முந்தைய பேப் பரிசோதனை சரியாக இருப்பவர்கள்.
- கருப்பையை வேறு காரணங்களுக்காக அறுவை சிகிச்சையால் அகற்றியவர்கள்.
 
										