ஹச்பிவி தொற்று ஆண்களையும் பெண்களையும் பொதுவாக தொற்றக்கூடிய நோய்க்கிருமியாகும். எண்பது சதவீத மக்கள் தங்களது வாழ்நாளில் ஹச்பிவி தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வழக்கமாக ஹச்பிவி நோய்தொற்று தன்னால் சரி ஆகிவிடும். தன்னால் சரியாகாத நோய்தொற்று புற்றுநோய் முன்மாதிரியாகவும் புற்றுநோயாகவும் மாறுவதற்கு வழிவகுக்கும்.
புற்றுநோய் ஏற்படுத்தும் ஹச்பிவி வகைகள் இளம்வயது பெண்களில் ஹச்பிவி தடுப்பூசி செலுத்திய பிறகு 70 சதவீதம் குறைந்துள்ளது.
ஹச்பிவி தடுப்பூசி ஒருவர்க்கு தொற்று ஏற்படுத்துவதற்கு முன்னர் செலுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

ஹச்பிவி தடுப்பூசி – இந்தியவில் உரிமம் பெற்ற வகைகள்
- கார்டாசில் (ஹச்பிவி 6,11,16,18)
- செர்வாரிக்ஸ் (ஹச்பிவி 16, 18)
இந்திய குழந்தைகள் நலக் கழகம்(ஐஏபி) ஹச்பிவி தடுப்பூசியை பின்வருமாறு பரிந்துரைக்கிறது.
- 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ஆறு மாத இடைவெளி விட்டு இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டும்.
- 15 வயது மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும், நோய்எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் மூன்று தடுப்பூசி 0, 1, 6 மாதம் இடைவெளி விட்டு போட வேண்டும்.
ஹச்பிவி தடுப்பூசி பற்றிய தகவல்கள்:
- ஹச்பிவி தடுப்பூசி எல்லா வகை ஹச்பிவி கிருமிக்கு எதிராக இல்லாததாலும், வேறுகாரணங்களால் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் வரக்கூடும் என்பதாலும் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட பிறகும் பெண்கள் தொர்ந்து திரத்தணிக்கை சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
தடுப்பூசி திரதணிக்கை சோதனைகளுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ள முடியாது.
 
										