இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய்.
இது இந்திய பெண்களில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோயாம்.
- உங்களுக்குத் தெரியுமா தினமும் பதினெட்டு இந்தியர்கள்மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள்?
- மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் தினமும் பத்து பெண்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள்.
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உங்கள் அழகையும் வாழ்வையும் பாதுகாக்கும்.
மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்கள் யார்?
- மார்பகப் புற்றுநோயை குடும்ப வரலாறாக கொண்டவர்கள்.
- முந்தைய மார்பக நோய் வரலாறு கொண்ட பெண்கள்.
- மாதவிடாய் சக்கரத்தை அதிக அளவில் எதிர் கொண்ட பெண்கள். அதாவது
 11 வயதுக்கு முன்பு பூப்படைதவர்களும்
 55 வயதுக்கு பின் மாதவிடாய் சக்கரம் நின்றவர்கள;
- தாய்மைபேறு அடையாதவர்கள் அல்லது 35 வயதுக்குப் பின் முதலாவது குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்.
- சூலகப்புற்றுநோய் வரலாறு கொண்ட பெண்கள்.
- தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்.
- மிகவும் பருமன் கூடிய பெண்கள் அல்லது மாதவிடாய் சக்கரம் நின்றவுடன் உடல் எடை அதிகமாகக் கூடியவர்கள் .
- வைத்திய ஆலோசனை இன்றி ஈஸ்ட்ரோஜென் கொண்ட கருத்தரிப்பு வில்லைகளை நீண்ட காலத்திற்கு பாவிபவர்கள்.
- சிறு வயதிலேயே நெஞ்சுப் பகுதிக்கு கதிர்வீச்சுப் பெற்றவர்கள் .
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மார்பகப் புற்றுநோய் வழிவகுக்கும். அவையாவன:
- அதிக அளவு கொழுப்பு உணவை உண்பவர்கள்
- குறைந்த அளவில் மரக்கறி , பழவகைகளை உண்பவர்கள்.
- உடற்பயிற்சி செய்யாதவர்கள்.
- அதிக அளவில் மதுபானம் அருந்துபவர்கள்.
- அதிக அளவில் புகை பிடிப்பவர்கள்.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்:

- அண்மையில் மார்பகத்தில் அல்லது அக்குள் பகுதியில் தோன்றிய கட்டி.
- அண்மையில் மார்பகத்தின் அளவிலோ முலைக்காம்பின் அளவிலோ மாற்றங்கள் அல்லது சமச்சீரின்மை.
- மர்பகதிலோ அல்லது அக்குளிலோ வீக்கம் அல்லது கட்டிகளும் படர் அடையாளங்கள் மார்பகத்திலும் முலைக்காம்புகளிலும் காணப்படல் .
- மார்பகத்தில் உட்குழிவு காணப்படல்.
- ஆரஞ்சு பழத்தின் தோலினை ஒத்த மார்பகத் தோல் மாற்றம் அடைதல் அல்லது மார்பகத் தோல் தழப்படைந்து காணப்படல்.
- முலைக்காம்பு உள் நோக்கி திரும்பி இருத்தல். முலைக்காம்பு சிதைவடைந்து இருத்தல்.
- பாலைத்தவிர முலைக்காம்பினூடக ஏதாவது திரவம் வெளிவரல்.
- மார்பகத்தில் தொடர்ந்து வலி.
மார்பகப் புற்றுநோய் வருவதை குறைபதற்கான வழிகள்:
- ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுதல்.
- வாரத்தில் 5 கிழமைகள் 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்தல்.
- மதுபானம் அருந்தாமல் இருத்தல்.
- புகைத்தலையும் புகையிலை சம்பந்தமான பொருட்கள் தவிர்த்தல்.
- குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல்.
- முறையான உணவு பழக்கங்களை மேற்கொள்ளுதல்.
 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒருமுறை மார்பக சுய பரிசோதனை செய்யவும்.
 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மார்பகக் கதிர்படமும் எடுக்க வேண்டும்.
- மருத்துவர் ஆலோசனையின்றி ஈஸ்ட்ரோஜன் கொண்ட மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்த்தல்.
சுய மார்பகதப் பரிசோதனை:
  
 
எல்லாப் பெண்களும் சுய மார்பக பரிசோதனை செய்வது எப்படி எனவும், ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து கொள்ளவும், தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
ஐந்து படிமுறைகள்:
படிமுறை 1:
 
 
கண்ணாடிக்கு முன்பாக நின்று தோள்பட்டையை நேராக வைத்து, இரு கைகளையும் இடுப்பில் வைத்து மார்பகங்களை பரிசோதிக்கவும்.
- இரண்டு மார்பங்களும் அளவு, உருவமைப்பு,நிறம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
- கட்டி அல்லது உருவமைப்பு மாறியுள்ளதா என பார்க்கவும்.
- மார்பகத்தில் உட்குழிவு, மார்பகத்தோல் தடிபடைந்தல், சிவத்தல், வீக்கம், முலைக்காம்பு உள்நோக்கி திரும்பியிருத்தல், சிதைத்தல் இருந்தால்உடனே மருத்துவரை அணுகவும்.
படிமுறை 2:

- தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள்.
- மேலே உரிய மாற்றங்கள் உள்ளனவையா என கவனிக்கவும்.
படிமுறை 3:
 
 
கண்ணாடி முன்பாக நின்று முலைக்காம்பை சூழ உள்ள கருத்த வட்ட பிரதேசத்தை பெருவிரலாலும் ஆள்காட்டி விரலாலும் மெதுவாக அழுத்தி, பாலைத் தவிர வேறு ஏதாவது திரவங்கள் வெளிவருகின்றவையா? என்பதை பரிசோதனை செய்யுங்கள்.
படிமுறை 4:


படுத்த நிலையில் பரிசோதிப்பதாயின் பரிசோதிக்கப்படும் மார்பகத்தின் தோள் பட்டையின் கீழ், சிறு தலையணையை வையுங்கள்.
- வலது மார்பகத்தை இடது கையாலும், இடது மார்பகத்தை வலது கையாலும் பரிசோதனை செய்யுங்கள்.
- படத்தில் கட்டியவாறு விரல்களை ஒன்றாக்கி விரல்களின் தட்டையான உட்பக்கதினால் அழுத்திப் பார்க்கவும்.
- மேற்கூறியபடி முழு மார்பகத்தையும் மேலிருந்து கீழ் வரையும், ஒரு பக்கவாட்டிலிருந்து மறு பக்கவாட்டிற்கு மறு பக்கவாட்டிற்கு
- பரிசோதனை செய்யவும்.
- மார்பகத்தின் எல்லா பகுதிகளிலும் முழுமையாகும் விதத்தில், கையை அழுத்திப் பார்க்கவும்.
- விரல் நுனிகளை பயன்படுத்தி மேலிருந்து கீழ் வரிசையாக அழுத்திப் பார்க்கவும்.
- முழு மர்பங்களையும் தொட்டு உணர்தல் வேண்டும்.
படிமுறை 5:

- அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ மார்பகங்களை தொட்டு உணர்தல் வேண்டும்.
- குளிக்கும் போது மார்பக பரிசோதனையை சுலபமாக செய்யலாம்.
- படிமுறை 4ல் கூறிய படி அழுத்தங்களை பிரயோகித்துத் தொட்டு உணர்தல் வேண்டும்.
எப்பொழுது சுய மார்பக பரிசோதனை செய்ய வேண்டும்?
சுய மார்பக பரிசோதனை வீட்டிலேயே செய்யலாம்.
- 20 வயத்திற்கு மேல் உள்ள அனைத்துப் பெண்களும் மாதம் ஒருமுறை சுய மார்பக பரிசோதனை செய்யவும்.
- மாதவிடாய் சீராக உள்ளவர்கள் உதிரப்போக்கு நின்று ஏழு நாட்கள் கழித்து செய்யலாம்.
- மாதவிடாய் சக்கரம் முற்றிலும் நின்ற பின்னர் ஒவ்வொரு மாதத்தில் குறிப்பிட்ட தினத்தில் செய்யலாம்.
மார்பக கதிர்ப்படம் (மமொகிராபி) என்றால் என்ன?

- மமொகிராபி அல்லது மார்பகக் கதிர்படம் என்பது மிகவும் வழுக்குறைந்த எக்ஸ் கதிர்கள் மூலம் மார்பகக் கட்டிகளை கண்டறியும் முறையாகும்.
- இருகைகளால் தடவி கண்டுபிடிக்க முடியாத கட்டிகளை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும்.
- 40 வயத்திற்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு, நெருக்கடி உள்ள பெண்கள் ஆகியோர் இந்த மார்பக கதிர்ப்படப் பகுப்பாய்விற்கு உட்பட பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மார்பகத்தில் ஏற்படும் எல்லாக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டியில்ல.
ஆனால் எந்த மார்பகக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம்.
புற்றுநோய் குணமடையும் வாய்ப்பு, மார்பகத்தை மறுசீரமைத்தல், உடலமைப்பு பேணுதல் ஆகியவை மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முடியும்.
 
										