GLOBACON 2018-ன் அறிக்கையில் தினமும் 132 இந்தியர்கள் புற்றுநோய் இருப்பதாக கண்டறியபடுகிறர்கள்.
மூன்றில் ஒருவகையான புற்றுநோயை தடுக்க முடியும்.
மூன்றில் ஒரு வகையான புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிப்பற்றி போதுமான அறிவு இருத்தல் வேண்டும்.
இந்தியாவில் காணப்படும் முதல் 10 புற்றுநோய்கள்:
- மார்பகம்
- வாய் மற்றும் கழுத்து
- கருப்பைக் கழுத்து
- நுரையீரல்
- இரைப்பை
- பெருங்குடல்
- உணவுக்குழாய்
- இரத்தப் புற்றுநோய்
- சூலகம்
- குரல்வளை புற்றுநோய்.
மார்பகப் புற்றுநோய்:
அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட பெண்கள்:
- மார்பகப் புற்றுநோயை குடும்ப வரலாறாக கொண்டவர்கள்.
- முந்தைய மார்பக நோய் வரலாறு கொண்ட பெண்கள்.
- மாதவிடாய் சக்கரத்தை அதிக அளவில் எதிர் கொண்ட பெண்கள். அதாவது
- 11 வயதுக்கு முன்பு பூப்படைதவர்களும்
- 55 வயதுக்கு பின் மாதவிடாய் சக்கரம் நின்றவர்கள்.
- தாய்மைபேறு அடையாதவர்கள் அல்லது 35 வயதுக்குப் பின் முதலாவது குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்.
- சூலகப்புற்றுநோய் வரலாறு கொண்ட பெண்கள்.
- தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்.
- மிகவும் பருமன் கூடிய பெண்கள் அல்லது மாதவிடாய் சக்கரம் நின்றவுடன் உடல் எடை அதிகமாகக் கூடியவர்கள் .
- வைத்திய ஆலோசனை இன்றி ஈஸ்ட்ரோஜென் கொண்ட கருத்தரிப்பு வில்லைகளை நீண்ட காலத்திற்கு பாவிபவர்கள்.
- சிறு வயதிலேயே நெஞ்சுப் பகுதிக்கு கதிர்வீச்சுப் பெற்றவர்கள் .
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மார்பகப் புற்றுநோய் வழிவகுக்கும். அவையாவன:
 - அதிக அளவு கொழுப்பு உணவை உண்பவர்கள்
- குறைந்த அளவில் மரக்கறி , பழவகைகளை உண்பவர்கள்.
- உடற்பயிற்சி செய்யாதவர்கள்.
- அதிக அளவில் மதுபானம் அருந்துபவர்கள்.
- அதிக அளவில் புகை பிடிப்பவர்கள்.
 
மருத்துவ அறிகுறிகள்:

- அண்மையில் மார்பகத்தில் அல்லது அக்குள் பகுதியில் தோன்றிய கட்டி.
- அண்மையில் மார்பகத்தின் அளவிலோ முலைக்காம்பின் அளவிலோ மாற்றங்கள் அல்லது சமச்சீரின்மை.
- மர்பகதிலோ அல்லது அக்குளிலோ வீக்கம் அல்லது கட்டிகளும் படர் அடையாளங்கள் மார்பகத்திலும் முலைக்காம்புகளிலும் காணப்படல் .
- மார்பகத்தில் உட்குழிவு காணப்படல்.
- ஆரஞ்சு பழத்தின் தோலினை ஒத்த மார்பகத் தோல் மாற்றம் அடைதல் அல்லது மார்பகத் தோல் தழப்படைந்து காணப்படல்.
- முலைக்காம்பு உள் நோக்கி திரும்பி இருத்தல். முலைக்காம்பு சிதைவடைந்து இருத்தல்.
- பாலைத்தவிர முலைக்காம்பினூடக ஏதாவது திரவம் வெளிவரல்.
- மார்பகத்தில் தொடர்ந்து வலி.
வாய்ப் புற்றுநோய்:
அதிக ஆபத்துகாரணிகளைக் கொண்ட நபர்கள்:
- வெற்றிலை மெல்லுவது. 
- பாக்கு, பாக்குத்தூள் மெல்லுவது. 
- புகைத்தல் (சிகரெட், பீடி, சுருட்டு). 
- மது அருந்துதல். 
- கூர்மையான பற்கள் அல்லது பொருத்தமில்லா பற்கட்டை உபயோகபடுத்துதல்.
- ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தொற்று.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் (மருந்து அல்லது நோய் காரணமாக).
- சத்துணவு குறைபாடு மற்றும் உணவில் பழங்கள், கீரை, காய்கறி தவிர்த்தல்.
- யுவி சூரிய கதிர்வீச்சு.
- சுகாதரமற்ற முறையில் வாயைப் பேணுதல்.
வாய்ப் புற்றுநோய் முன்னோடியின் அறிகுறிகள்:
வாய் சுயபரிசோதனை மூலம் வாய்ப் புற்றுநோய் ஏற்படும் முன்னர் ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டுபிடிக்கலாம்.
- நீண்ட நாளாகக் காணப்படும் அகற்ற முடியாத வெள்ளைத் தழும்பு. 
- வாய்ப்பகுதியில் நீண்டநாளாக காணப்படும் அகற்ற முடியாத வெள்ளையும் சிவப்பு நிறமும் கலந்த தழும்பு 
- வாயில் ஏற்படும் அதிகமான எரிச்சல், உதடு, வாயினுள் தோன்றிய வெண்படலமும் தடித்தும் வெள்ளையுமாகவும் காணப்படுதல். 
- வாயினுள் உள்ள சவ்வு பளிங்குபோல இருத்தல். 
வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள்:
- வாயில் உள்ள நீண்டநாளாக ஆறாத புண்.
- நாக்கை மடிப்பதினால் சிரமம் அல்லது நாக்கை அசைக்க முடியாத நிலை.
- வாயின் உட்பகுதியிலோ, வெளிபகுதியிலோ, கழுத்து பகுதியிலோ கட்டி மூன்று திங்கட்கிழமைக்கு மேல் இருத்தல்.
- வாய் திறக்க ஏற்படும் கஷ்டம்.
- தாடைப் பகுதியில் கட்டி அதனால் கட்டுப்பல் சரியாக பொருந்தாமல் இருப்பது.
- உணவு விழுங்குவதற்கு சிரமம், உணவு விழுங்கும்போது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் நீண்ட நாளாக இருக்கும் புண்.
- வாயில் இருந்து வரும் உதிரபோக்கு.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்:
கருப்பைக் கழுத்தில் தொடர்ந்து காணப்படும் ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தொற்றே கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக இருக்கிறது. கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு முந்தைய நிலையிலோ அல்லது ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், புற்றுநோயை முழுமையாக தடுக்கலாம்.
பரிசோதனையானது மிக சுலபமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மலிவனதுமான பரிசோதனையாக திகழ்கிறது. பப் பரிசோதனையில் கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை மிக ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்பட அதிக ஆபத்துக் காரணிகள் கொண்ட பெண்கள்:
- ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தொற்றுடையவர்கள்.
- மிக இளவயதில் பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணைகளைப் பெற்றவர்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணைகளைப் கொண்டவர்களை பாலியல் இணையாகப் பெற்றவர்கள்.
- புகைப்பழக்கம் உள்ளவர்கள் அல்லது அதிக அளவில் புகைப்பழக்கம் உள்ளவர்களோடு அருகில் இருப்பவர்கள்.
- சில நோய்களுக்காக, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் மருந்து வகைகளை எடுத்துகொள்பவர்கள்.
- கடந்த காலங்களில் பாலியல் ரீதியாக தொற்றுநோய் வரலாறு கொண்டவர்கள்.
- மிக அதிக குழந்தைகளை பெறுபவர்கள்.
மருத்துவ அறிகுறிகள்:
புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள், எந்த அறிகுறியும் காண்பிப்பது இல்லை. புற்றுநோய்க்கு முந்தைய நிலையிலிருந்து ஆழ ஊடுருவும் புற்றுநோயாகப் பரிணமிக்கும் போதே புற்றுநோய்க்குறிய அறிகுறிகள் வெளிகாட்டபடுகிறது.
புற்றுநோய் அறிகுறிகள்:
- மாதவிடாயின் போது அதிக இரத்தம் வெளியேறுதல். 
- யோனியினூடாக ஒழுங்கற்ற குருதிப் பெருக்கு.
- தாம்பத்திய உறவின்பின் யோனியினூடாகக் குருதிப் பெருக்கு.
- யோனியினூடாகக் குருதிக் கலந்த அல்லது துர்வாடை கொண்ட திரவப் பெருக்கு. 
- மாதவிடாய் சக்கரம் முற்றாக நின்றபின் இரத்தப்போக்கு ஏற்படல்.
- இரு மாதவிலக்கிற்கு நடுவே இரத்தப் போக்கு ஏற்படுதல்.
- அடி வயிற்று வலி.
சுவாசப்பைப் புற்றுநோய்:
புகைப்பிடித்தல், புகைப்பவர்களுக்கு அருகில் இருத்தல், காற்று மாசுபடுதல் ஆகியவை சுவாசப் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.
 
மருத்துவ அறிகுறிகள்:

- நீண்ட நாளாகக் காணப்படும் இருமல்.
- சளியுடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்.
- சளியின் அளவும், நிறமும் மாறி இருத்தல்.
- சுவாசிப்பதில் சிரமம்.
- காரணம் அறியபடாத நீண்ட நாளாக காய்ச்சல்.
- கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நினநீர் முடிச்சுகள் வீங்கி இருத்தல்.
- பசியின்மை, எடை குறைதல்.
- முதுகு அல்லது நெஞ்சு வலி.
இரைப்பைப் புற்றுநோய்:
 

- விழுங்குவதில் சிரமம்.
- வயிறு வீங்கியிருத்தல் அல்லதுசிறிது உணவு அருந்திய உடனே நிறைந்த உணர்வு.
- வயிற்றில் மேற்பகுதியில் வலியும் அசௌகரியமும் ஏற்படல்.
- பசியின்மை அல்லது தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல்.
- கருப்பு நிறமாக மலம் கழித்தல்.
- ஓங்காளம் மற்றும் வாந்தி ஏற்படல்.
- இரத்தச் சோகை.
- வயிறு வீக்கம்.
 
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்:

- மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்.
- மெல்லிய நூல் இழைபோல் மலம் வெளியேறல்.
- வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கலுடன் கலந்த மலங்கழிக்கும் வழக்கம்.
- மலவாசலுக்கூடான இரத்தப்போக்கு காணப்படல்.
- முழுமையான மலம் வெளியேறாத உணர்வு காணப்படல்.
- வயிற்று வலி.
- மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுதல்.
- காரணமற்ற உடல் எடை குறைதல் மற்றும் பசியின்மை.
உணவுக்குழாய் புற்றுநோய்:
 

அறிகுறிகள்:
- மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து உணவு விழுங்குதல் கஷ்டம்.
- மூன்று வாரங்களுக்குமேலாக உணவு விழுங்கும் போது வலி ஏற்படல்.
- நெஞ்சில் வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்சு இறுக்கமாக இருத்தல்.
- வாந்தி
- தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல்.
இரத்த புற்றுநோய்:
 

அறிகுறிகள்:
- வெளிறிக் காணப்படுதல்;
- களைப்பாக உணர்தல்
- காரணம் தெரியாத நீண்ட நாட்களுக்கு காணப்படும் காய்ச்சல்
- நிணநீர் முடிச்சுகள் வீங்கி காணப்படல்;;
- உட்புறத்திலும் வெளியிலும் தெரியக்கூடிய விதத்திலும் இரத்தப்பெருக்கு
- அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படல்
- காரணமற்ற உடல் எடை இழப்பு
- எளிதாக இரத்தம் கண்டலடைதல்
சூலகப் புற்றுநோய்:
 
பெரும்பாலான சூலகப் புற்றுநோய்கள் முற்றிய நிலையை அடையும் வரை எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாது.

அறிகுறிகள்:
- தொடர்ந்து காணப்படும் அஜீரணம்
- வயிற்றில் ஏற்படும் அசௌகரியம்
- வயிற்று வலி
- சிறிதளவு உண்ட பிறகு வயிறு நிறைந்த நிலையில் இருத்தல்
- வயிற்றின் சுற்றளவு அதிகரித்து இருத்தல்;
- சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் காணப்படல்
குரல்வளைப் புற்றுநோய்:
அறிகுறிகள்:
- மூன்று வாரங்களுக்கு மேல் குரலில் ஏற்படும் மாற்றம் அல்லது கரகரப்புத் தன்மை
- மூன்று வாரங்களுக்கு மேல் காணப்படும் இருமல்
- தொண்டையில் தொடர்ந்து வலி
- உணவு விழுங்குவதில் சிரமம்
- கழுத்தில் கட்டி
- மூச்சு விடுவதில் சிரமம்.
கருப்பைப் புற்றுநோய்:
 
அறிகுறிகள்:
- யோனியினூடாக அசாதாரண இரத்தப் பெருக்கு
- மாதவிடாய் சக்கரம் நின்ற பின்னர் இரத்தப்போக்கு ஏற்படுதல்
- வயிற்று வலி
- வயிற்றின் சுற்றளவு அதிகரித்தல்
- சிறுநீர் மற்றும் மலம் பழக்கத்தில் மாற்றம் காணப்படல்
கேடயப்போலிச் சுரப்பிப் புற்றுநோய்: (தைராய்டு):
 
அறிகுறிகள்:
- மூன்று கிழமைகளுக்கு மேலாகக் காணப்படும் தைராய்டு சுரப்பி பெரிதாகுதல் அல்லது அளவில் மாற்றம் இருத்தல்
- கழுத்தில் இரு பக்கங்களிலும் நெரிக்கட்டி பெரிதாக இருத்தல்
- காரணமில்லாமல் குரல் கரகரப்படைதல்
- கழுத்தில் ஏற்படும் வலி
- உணவு விழுங்குவதில் சிரமம்
- மூச்சு விடுவதில் சிரமம்
சிறுநீரகப் புற்றுநோய்:
 

அறிகுறிகள்:
- வழியற்ற, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்
- முதுகுவலி மற்றும் வயிற்றின் பக்கவாட்டிலும் வலி ஏற்படுதல்
- வயிற்று வலி அல்லது வயிற்றின் சுற்றளவு அதிகரித்தல்
- உயர் இரத்த அழுத்தம்
- அதிக சோர்வு
- இரவில் அதிக வியர்த்துப்போதல்
- காரணமற்ற உடல் எடை இழப்பு
- காரணமில்லாத நீண்ட நாளாகக் காணப்படும் காய்ச்சல்
- எலும்புகளில் வலி
சிறுநீர்பைப் புற்றுநோய்:

அறிகுறிகள்:
- சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்
- சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்
- சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகரித்தல்
- முழுமையாக சிறுநீர் கழிக்காத உணர்வு
- முதுகு வலி
சுக்கிலச் சுரப்பிப் புற்றுநோய்:

அறிகுறிகள்:
- சிறுநீர் கழிப்பதில் கடினம்
- மெல்லிய இழையாக சிறுநீர் வெளியேறுதல்
- முழுமையாக சிறுநீர் கழிக்காத உணர்வு
- சிறுநீர் அதிக அளவில் வெளியேறுதல்
நிணநீர்ச் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்:(Lymphoma)

அறிகுறிகள்:
- உடலில் காணப்படும் நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி காணப்படுதல்
- கரணம் அறியப்படாத நீண்ட நாட்களுக்கு காணப்படும் காய்ச்சல்
- உடல் அரிப்பு திட்டுகள் மற்றும் தோல் முடிச்சுகள் தோன்றுதல்
- அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல்
- காரணமில்லாத உடல் எடை இழப்பு
- களைப்பாக உணர்தல்
- இரவு நேரத்தில் அதிகளவில் வியர்த்தல்
மூளைப் புற்றுநோய்:

அறிகுறிகள்:
- தீராத தலைவலி
- வலிப்பு ஏற்படுதல்
- தலைவலியோடு வாந்தி வருதல்
- கண் பார்வை மங்கலாகத் தெரிதல்
தோல் புற்றுநோய்:


அறிகுறிகள்:
- தோலில் நீண்ட நாளாக மாறாத புண்கள் காணப்டுதல்
- ஏற்கனவே இருக்கும் தழும்பு அல்லது கருப்பு புள்ளிகளில் ஏற்படும் அபரிமிதமான மாற்றம் அல்லது வளர்ச்சி
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அழிப்போம்
மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.
 
										