புற்றுநோய்களில் மூன்றில் ஒரு வகையான புற்றுநோயை உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் அமைத்துக் கொள்வதன் மூலம் தடுத்துக் கொள்ளமுடியும்.
தடுத்துக் கொள்ள வேண்டிய புற்றுநோய்களை தடுத்துக் கொள்வோம்.
புற்றுநோய் விளைவிக்கும் ஆபத்து காரணிகள் மற்றும் புற்றுநோய் தடுக்கும் வழிமுறைகள் :
புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு புற்றுநோய் விளைவிக்கும் ஆபத்து காரணிகளைப் பற்றியும் தடுப்பு முறைகள் பற்றியும் பரந்த அறிவு வேண்டும்.
1. சிகரெட் புகைத்தலும் புகையிலை பாவித்தலும் கூடாது:


- புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருட்கள் 
 - இருதய நோய், சுவாச நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
- வாய்ப் புற்றுநோய், தொண்டை, குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல், மலவாசல் புற்றுநோய் ஏற்படுத்தும்.
 
- புற்றுநோய் வராமல் தடுத்துக் கொள்வதில் முக்கியமானது புகைத்தலையும், புகையிலை, சிகரெட் பயன்படுத்துவதையும் தவிர்ப்பதாகும்.
- ஏற்கனவே புகையிலையும், சிகரெட் புகைத்தலும் இருந்தால் உடனடியாக அதன் பயன்பாட்டை நிறுத்தவும்.
- வராமல் தடுத்துக் கொள்ளக்கூடிய புற்றுநோய்களில், 50 சதவீதமானதை புகைத்தல் மற்றும் புகையிலை, சிகரெட் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளைப் பாவிக்காமல் இருப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.
2. வெற்றிலை மெல்லுதல் கூடாது:
 
வெற்றிலை சுருளில் உள்ள புகையிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு ஆகியவை வாய்ப் புற்றுநோய், தொண்டை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுத்துகின்றன.
3. மதுபானம் பாவித்தல் கூடாது:
 
 
மதுபானம் பாவிப்பதால் வாய்ப் புற்றுநோய், தொண்டை, குரல்வளை, இரைப்பை, ஈரல், பெருங்குடல் மற்றும் மார்பகத் புற்றுநோய் ஏற்படுத்தும்.
4. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்:
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கதால் வாய்ப் புற்றுநோய், உணவுக்குழாய், இரைப்பை, குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. சுகாதாரமான சரிவிகித உணவுகளை உண்பதால் புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.
உணவுப் பிரமிட் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உண்பதற்காகும்:
 
- பலவிதமான உணவுகளை உண்பதால் சரிவிகித உணவை பூர்த்தி செய்ய முடியும்.
- மகப்பேறு காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும் பெண்களுக்கு கூடுதல் உணவு மற்றும் சுகாதாரம் பராமரிப்பு அளிக்க வேண்டும்.
- குழந்தை பிறந்து முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தலும் பின்னர் இரண்டு வயது வரை திட உணவோடு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
- ஆறுமாதம் மேலான குழந்தைக்கு வீட்டில் தயாரித்த உணவையே கொடுக்கும் வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும்போதும் நோயுற்றபோதும் சரியான மற்றும் தேவையான உணவை எடுத்துக் கொள்கிறார்களா என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
- தினமும் ஐந்து பகுதி காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் சேர்த்து உண்ண வேண்டும்.
- சமையல் எண்ணெய், இறைச்சி வகைகள், வெண்ணெய், நெய் மற்றும் வனஸ்பதி ஆகியவை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
- உப்பு மற்றும் நிரம்பிய கொழுப்புகள் குறைந்த உணவு வகைகள் உண்ண வேண்டும்.
- ஒட்டுமொத்த கலோரி தேவையில் 15-20 சதவீதத்தை கொழுப்புகள் மூலம் பெறலாம்.
- அதிகமாக உண்பதை தவிர்த்து உடல்பருமனை தடுக்கலாம்.
- ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை சரியானபடி பராமரிக்கலாம்.
5. உடற்பயிற்சி செய்தல்:
 
உடற்பயிற்சி செய்யாததால்;
- உடலின் எடை அதிகரிக்கின்றது.
- நோய் மற்றும் கிருமித் தொற்று அதிகரிக்கும்.
- இன்சுலின் ஹார்மோனுக்கு எதிர்பின் நிலை உருவாகும்.
- உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடையும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் அளவைப் பொறுத்து, உங்களுக்கு சுவாசப்பை, மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகள் குறைவடையும். இது ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்விற்கு வாரத்தில் 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிடம் தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி, வாழ்வின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்:
- உடற்பயிற்சி செய்வதினால், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முடியும்.
- உடம்பில் உள்ள ஹார்மோன்களின் அளவை உடற்பயிற்சி கட்டுபடுத்தும். சில ஹார்மோன்களின் அளவை உடற்பயிற்சி கட்டுபடுத்தும். சில ஹார்மோன்களின் ஏற்றதாழ்வுகளாலே புற்றுநோயின் வாய்ப்பு அதிகரிக்கிறது.
- உடற்பயிற்சி செரிமானத்தை வேகப்படுத்துகிறது. இதனால் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குடலிலேயே தங்கும் நேரம் குறைகிறது.
6. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன உளைச்சலைக் குறைக்கவும் வேண்டும்:
 
அதிகமான மன உளைச்சலால்,
- உங்களை புகைத்தல், அதிகமான உணவு உண்ணுதல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக்கும்.
- இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் குறைப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை பாதுகாத்துக் கொள்ளும் தன்மையைக் குறைக்கின்றது
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த :
  

- மனதுக்கு ஓய்வழிக்கும் உடற்பயிற்ச்சிகளில் ஈடுபடுங்கள்.
- விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.
- சமூகத்துடன் ஒன்றிணந்து பொதுநல காரியங்களில் ஈடுபடுங்கள்.
- ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள்.
- முடிந்து போன காலத்தை அல்லது இறந்த காலத்தை நினைத்துக் கவலைப்படுவதையோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி அவசியமற்ற கனவு காண்பதையோ தவிர்த்து நிகழ்காலத்தில் வாழுங்கள்.
7. தொற்றுநோய்க்கு உரிய சிகிச்சையும் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் : 
ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்:
 
 
ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் தொற்று கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஹெபடைடிஸ் பி தடுப்பூசி ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று வராமல் தடுக்கும்.
ஹியுமன் பப்பிலோம வைரஸ்:
 
 
ஹியுமன் பப்பில்லோம வைரஸ் கருப்பைக் கழுத்து புற்றுநோயும் வாய்ப் புற்றுநோயும் ஏற்படுத்துகிறது.
ஹச்பிவி தடுப்பூசி 9 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ஹச்பிவி தொற்று குறைய வாய்ப்புள்ளது.
8. ஆபத்தான நடத்தையை தவிர்க்கவும் :
ஆபத்தான நடத்தினால் தொற்றுநோய் வரவாய்ப்பு அதிகம் அதனால் புற்றுநோய்க்கு காரணமாகவும் அமைகிறது.
பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளவும்:
 
  
- ஒன்றுக்கு மேற்கொண்ட பாலியல் தொற்றுநோய்க்கு உள்ளாவர்கள். ஹச்ஐவி மற்றும் ஹச்பிவி தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
- ஹச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பைக் கழுத்து புற்றுநோய், மலவாசல், கல்லீரல் மற்ற நுரையீரல் புற்றுநோய் அதிகமாக வரவாய்ப்புள்ளது
ஊசிகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

9. வழக்கமான மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ளவும் :

சுயபரிசோதனைகள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பரிசோதனைகளை சரியான முறையில் செய்துக் கொண்டால் புற்றுநோய் வரும் முன்னரோ அல்லது ஆரம்ப நிலையிலேயே அறிந்துக் கொள்ளலாம்.
10. சுத்தமான சுகாதாரமான சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் :

- புகையில்லா சுற்றுச்சூழலை உருவாக்கவும். சுகாதாரமான சுற்றுச்சூழலால் சுத்தமான காற்று, நீர் கிடைக்கும். அதுமட்டுமல்லாது புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் பூச்சுக்கொல்லி மற்றும் நச்சு பொருட்களிடம் இருந்து பாதுகாக்குகிறது.
- சுத்தமான சுகாதாரமான சூழல் தொற்று வராமல் தடுக்கும். அதனால் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும்.
11. தொழில்சார் ஆபத்தை தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு அணிகலன்களை தொழில் செய்யும் இடத்தில் அணியவும் :


நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், குரல்வளைப் புற்றுநோய், சிறுநீர்பைப் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவை தொழில்சார் புற்றுநோய்களாகும். தொழில்சார் ஆபத்தை தவிர்ப்பதாலும் மற்றும் பாதுகாப்பு அணிகலனை தொழில் செய்யும் இடத்தில் அணிவதாலும் தொழில்சார் புற்றுநோயை தடுக்கலாம்.
புற்றுநோய் என்பது முடிவல்ல.
புற்றுநோய் தலைவிதியும் அல்ல.
முறையான வாழ்க்கை முறையால்
புற்றுநோயை தடுத்துக் கொள்வோம்.
வாழ்வை வெல்வோம்.
 
										